திருவேற்காட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி - ஆவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராஜசிம்ம மகேந்திரா, அவர்கள் திருவேற்காடு பகுதியில் வார்டு வார்டாக கூட்டணி கட்சி தோழர்களுடன் சென்று மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், திமுக செய்த ஊழலை சுட்டிக்காட்டி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவேற்காடு 15 -வது வார்டில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாதரவேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருமாள் கோயில் அருகில் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பெண்கள் ஆர்த்தி எடுத்து மிக பிரமாண்டமான முறையில் வரவேற்றனர்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக கட்சி வர்த்தக அணி அமைப்பாளர் பாலு மற்றும், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்


Leave a comment