தமிழ்நாடு அரசின் சத்துணவு முட்டையில் ஆம்லேட் போட்டு விற்பனை செய்த உணவகம் மூடி சீல் வைக்க உத்தரவு

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள உணவகம் தேநீர் கடைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் 15 ரூபாய்க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததில் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைக்க உத்தரவு விட்டுள்ளனர். அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் சத்துணவு முட்டைகள் நாள் தோறும் உணவகத்திற்கு செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment