பரதனை போல் ஆட்சி செய்வேன் : டெல்லி முதல்வர் அதிஷி அறிவிப்பு

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்ற நிலையில், அவர் தனது எக்ஸ் தலத்தில், "தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் அயோத்தியை பரதர் ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். 

ராமரின் செருப்பை வைத்து பரதர் எப்படி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தாரோ, அதே போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்" என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தில், முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர்ந்துள்ளார். பக்கத்தில் இன்னொரு காலி நாற்காலி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment