AMI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற KIOT மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி AMI நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரும் கல்லூரி முதல்வருமான முனைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் துணைத் தலைவராக அமெரிக்காவில் பணிபுரியும் சூசன் ஜேங்க் 22 மாணவர்களுக்கு பணிநீயமான ஆணைகளை வழங்கி பாராட்டி பேசினார். மேலும் AMI நிறுவனத்தில் இந்திய கிளையின் துணைத் தலைவராக பணிபுரியும் ரமேஷ் ராஜு, மேலும் இந்தியாவின் AMI நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால், இந்தியாவின் AMI நிறுவனத்தின் மனித வள தலைவர் சாந்தா, மனித வள மேம்பாட்டு துறையின் தலைமை மேலாளர் செந்தில்குமார், மனிதவள மேம்பாட்டு துறையின் மூத்த ஆலோசகர் அர்ச்சனா, மற்றும் மூத்த திட்ட மேலாளர் தன்ராஜ் ஆகியோர் பங்குபெற்று AMI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற 22 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மாணவர்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற கல்லூரியின் நிர்வாகத்தை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி பேசினர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் விசாகவேல், மற்றும் வேலை வாய்ப்பு துறை இயக்குனர் முனைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். உதவி பேராசிரியர் ஜெகதீஷ் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.மற்றும் இணை பேராசிரியர் கல்பனா தேவி நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர்கள் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

 

 

Leave a comment