நடிகர் விஜயும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து கலந்து கொள்வது சம்பந்தமாக தெரிவிக்கப்படும். நடிகர் விஜயும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா? அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Leave a comment