சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான் : உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்ததை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 இந்த மனு மீது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும், சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான் என்றும், குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று கூறியுள்ளனர்.

 

 

Leave a comment