டி.வி.எஸ்.நிறுவனத்தின் தலைவர் - தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில், டி.வி.எஸ்.நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், நேரில் சந்தித்தார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அரசு முறை பயணமாக முதல்வர் அமெரிக்கா சென்றிருந்தார். முதல்வரின் அமெரிக்க பயணத்தினால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்தமைக்காக டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது டி.வி.எஸ்.நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் அவர்களின் மனைவி திருமதி மல்லிகா சீனிவாசன் உடனிருந்தார்.


Leave a comment