நடிகர் ரஜினியின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி விசாரித்தார்
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.
ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்துள்ளார். அதோடு ரஜினிகாந்த் பூரண நலமடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார் என்று பகிர்ந்துள்ளார்.


Leave a comment