சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு நல்லாயன் கன்னியர் இல்லம் மற்றும் அமைதி சங்கம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சேலம் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், காவல் உதவி ஆணையாளர் ஹரிசங்கரி, மௌலவி சைபுல்லா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
சேலம் கோட்டை மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியானது கலெக்டர் அலுவலகம் வழியாக ஒய்.எம்.சி.ஏ அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அமைதி குறித்த பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அருட் சகோதரி ராஜகுமாரி,பிரம்மகுமாரி மகேஸ்வரி, ராஜன் டேனியல் உட்பட பல்வேறு மத தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Leave a comment