இலங்கையின் புதிய அதிபர் யார் ? பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு நடைபெறுகின்ற பொது தேர்தலில் யார் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. மக்கள் புரட்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நடை பெற்ற தேர்தலில்  38 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று மாலை 4 மணியுடன் நிறைவு பெற்ற வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி உள்ளது.இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.


 

 

Leave a comment