பிரதமரை சந்தித்து தமிழக கோரிக்கைகளை முன் வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகளை மனுவாக பிரதமரிடம், முதல்வர் வழங்கினார்.
மேலும் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு வழங்கவேண்டிய நிதி மற்றும் மாநில வளர்ச்சி குறித்து முதல்வர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


Leave a comment