தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களுக்கான பதவி பிரமாணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைக்கிறார்

தமிழக முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று துணை முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கான பதவி பிரமானத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று செய்து வைக்கிறார். சென்னை ராஜ்பவனில் மாலை 3.30 மணி அளவில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சராகவும், பதவி ஏற்க உள்ளார். இவர் ஏற்கனவே பதவி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை ஓதுக்கப்படுகிறது. 

 மேலும் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கபடுகின்றனர்

 

 

Leave a comment