ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 86. இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28ஆம் திகதி சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்கு சேர்ந்தார். தேசம் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார். டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment