கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் ட்ரோபி பைக் பந்தய போட்டி
கோவை தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு அணி சார்பில் மாபெரும் பைக் பந்தயம் நடைபெற்றது.இந்த பைக் பந்தைய போட்டியை தெற்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணை பெரும் தலைவர் எம்.ஆர்.ஆர் பிரகாஷ் முன்னிலை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் ஏ.எஸ்.காதர், தெற்கு பகுதி செயலாளர் கார்த்திகேயன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜய் சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணை பெரும் தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ் வழங்கினார்கள்.


Leave a comment