தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் : ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வில் தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இரட்டை இலை சின்னமானது ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.13 இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
தொண்டர்கள் பிரிந்து இருப்பதே அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணமாகும். நான் தனித்து போட்டியிட்ட ராமநாதபுரம் தொகுதியில் 33 சதவீத வாக்குகள் பெற்றேன். இதிலிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை என்று கூறினார்.


Leave a comment