பெண்ணின் உடலை பல துண்டுக்களாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் : பெங்களுருவில் பரபரப்பு

பெங்களுருவில் தனியே வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் பல துண்டுக்களாக வெட்டி அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்துள்ள சம்பவம் பெங்களுருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுருவில் ஒரு விட்டில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பிரிட்ஜில் ஒரு பெண்ணில் உடல் பல துண்டுக்களாக வெட்டி, வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. எதற்காக இந்த பெண் கொலைசெய்யப்பட்டால், யார் குற்றவாளி என்ற தகவல்கள் மேலும் விசாரணையில் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

Leave a comment