திமுக – விசிக இடையே எந்த சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பும் இல்லை : திருமாவளவன் திட்டவட்டம்
விசிகாவின் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக - விசிக கூட்டணியில் பிளவு குறித்த செய்திகள் உலாவி வந்த நிலையில், இது குறித்து அக்கட்சியில் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக- விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்துவிட்டது. அதனால் திமுக – விசிக இடையே எந்த சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
மேலும் ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம் பெற்றுள்ளவர்களிடம் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Leave a comment