பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் கோவிந்தராஜ் (வயது25) என்பவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Leave a comment