சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைகான  விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது

இதில் சேலம், நாமக்கல், ஈரோடு,  திருப்பூர், கோயம்புத்தூர்,  நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல குழு தலைவர் உமாராணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேற்பார்வையாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் ,சேலம் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சேலம் மாவட்ட தலைவர் உலக நம்பி, செயலாளர் மார்ட்டின் பொருளாளர் சக்திவேல், புரவலர் தண்டபாணி, சீனியர் துணைத் தலைவர் ரவி, பிரேம்குமார், வெங்கடேஷ், பிரேம், காளி, மோகன்ராஜ்,கோடீஸ்வரி, சசிகுமார் ஆகியோர் கலந்து  கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் ஜூன் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, துணைச் செயலாளர் சரவணன், துணை பொருளாளர் உதயகுமார் உட்பட நடுவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.


 

 

Leave a comment