சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்வோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காந்தி ஜெயந்தி முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், அகிம்சை உண்மை மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது.காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில் தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. 

இந்திய மக்களைப் பிளவுபடுத்தி அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்  


 

 

Leave a comment