நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்தில் இருந்து பிரியும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் ஸ்டென்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
இந்நிலையில் சிகிச்சை நிறைவு பெற்றதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். சிலநாட்களுக்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்து நல்ல முறையில் பூரண குணமடைய ரசிகர்கள் பிராத்தனையாக உள்ளது.


Leave a comment