தூத்துக்குடியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா கனிமொழி, எம்.பி., துவக்கி வைத்தார்
தூத்துக்குடி இபி காலனி பகுதியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான துவக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தார். இந்நிகழ்சியில், அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 3வது நெய்தல் கலைத் திருவிழா - 5வது புத்தகக் கண்காட்சி அக்டோபர் 3 முதல் 13 வரை நடைபெற இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஒட்டு வில்லைகளை(Stickers) கனிமொழி அறிமுகப்படுத்தினார்.


Leave a comment