பல உண்மைகள் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்கே சவுக்கு மீடியா முடக்கம் : சவுக்கு சங்கர் குற்றசாட்டு
உச்சநீதிமன்றத்தால் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதையொட்டி அவர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதில் டிசம்பர் 2023-ல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இதை தடுக்கப்பட வேண்டும். தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடுவடிக்கை எடுத்து இருந்தால் என்றால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது, இதுபோன்ற பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டதாக தெரிவிர்த்தார்.
மேலும் நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.


Leave a comment