ஜம்மு – காஷ்மீர் முதன்முறையாக பயங்கரவாதத்தின் நிழல் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது : பிரதமர் மோடி

ஜம்மு – காஷ்மீர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், காஷ்மீர். ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று 7 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. முதன்முறையாக இந்த வாக்குப்பதிவு பயங்கரவாதத்தின் நிழல் இல்லாமல் நடந்தது.பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கிஷ்த்வாரில் 80% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, தோடா-வில் 71% வாக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பல தொகுதிகளில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. இங்குள்ள 3 குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் அரசியலை தங்கள் சொத்தாகக் கருதுகின்றன. தங்கள் குடும்பத்தைத் தவிர, வேறு யாரையும் முன்வர அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இல்லையெனில் உள்ளாட்சி தேர்தல்களை ஏன் நிறுத்தினார்கள்? முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது காஷ்மீர் எவ்வளவு மாறிவிட்டது. இன்று தேர்தல் பிரச்சாரங்கள் கூட இரவு வரை நடந்து வருகிறது, இன்று மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு தங்கள் வாக்குகளால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

Leave a comment