கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது : திருப்பதி லட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோட்டில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கானது நீதிபதிகள் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு இன்று வந்தபோது, நீதிபதிகள் சரமாரியாக கேட்ட கேள்விகள், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக கடவுளை வைத்திக்க வேண்டும். மத உணர்வுகளை மதிக்க வேண்டும். திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை.
அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்? எஸ்.ஐ.டி., குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்கே? சுவை மாறியதாக கூறப்படும் லட்டுகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனவா?
தற்போதைய நிலையில் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது.
தொடர்ந்து புகார் கிடைக்கபெற்றிருந்தால் நெய் டேங்கர்கள் அனைத்திலும் மாதிரி எடுத்திருக்க வேண்டும். திருப்பதி லட்டு விவகாரத்தை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி., விசாரிப்பதா? அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிப்பதா? என்பதை மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவுவிட்டனர்


Leave a comment