ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காட்டில் சா,மு, நாசர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆவடி சா,மு, நாசர், திருவேற்காட்டு மற்றும் அயனம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஆவடி சா,மு, நாசருக்கு மேலத்தாலத்துடன் மலர் தூவி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவேற்காடு நகர கழக செயலாளர் N,E,K, மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் துரை கோபால், சரவணன் ,சுதாகர், பிரதானம், தெய்வசிகாமணி, பவுல் விநாயகம் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட நகர நிர்வாகிகள், ஊர்வலமக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

 

Leave a comment