ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமையில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 10 கிராமத்தை சேர்ந்த ஊர் பொது மக்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்..

அதில் கன்னியம்மன் நகர் பகுதியில் சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கன்னியம்மன் நகர் தொடங்கி சென்னை பாரி முனை எழும்பூர் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் குடியிருப்பு பகுதிகளை சுற்றுயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.. இதனை தொடர்ந்து 5 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

 

 

Leave a comment