தங்கம் போல் விலை ஏறி கொண்டே போகும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை

அன்றாடம் நாம் வீட்டில் சமைக்கும் சமையலுக்கு பெரும் பங்கு வகிப்பது வெங்காயமும், தக்காளியும், இல்லதரிசிகளுக்கு இவற்றின் விலைவாசி உயந்து வருவது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால், பல வீடுகளில் சைவம் உணவினை தான் பெரும்பாலும் சமைத்து உண்ணுகிறார்கள். கீரை உள்ளிட்ட சில காய்கறிகளின் விளையும் உயர்ந்து உள்ளது. தக்காளியின் விலை 50 ரூபாயை தாண்டியுள்ளது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்நாட்டின் தேவைக்கு பூர்த்தி செய்ய முடியாமல் போவதினால் விலை உயர்த்த படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் வரத்தும் பருவமழை காரணமாக குறைந்துள்ளதால், விலைவாசி உயர்விற்கு காரணமாக அமைகிறது. பொதுமக்களை மிகவும் பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வினை மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

Leave a comment