பிரதமரை சந்தித்து முன்வைத்த முக்கிய பிரச்சனைகள் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
டெல்லியில் பிரதமரை சந்தித்து முன்வைத்த தமிழகத்திற்கான முக்கிய பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது. எங்களது கோரிக்கைகளை வைத்துள்ளோம். சென்னை மெட்ரோ முதல்கட்ட பணியை போல, இரண்டாம் கட்ட பணியையும் கால தாமதம் இன்றி செயல்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். சென்னை மெட்ரோ திட்டபணிகளுக்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படவில்லை.சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் தொய்வின்றி நடைபெற நிதியை வழங்க கோரிக்கை வைத்தேன்.
தேசிய கல்வி கொள்கையில் உடன்பாடு இல்லை, அதனை திருத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். மேலும், நான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இதனால், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இந்த காரணத்தினால், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. எனவே நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். அனைத்து கோரிக்கைகளையும் பிரதமர் மோடி கூர்ந்து கவனித்தார்.” என்று தெரிவித்தார்.


Leave a comment