குரூப் 4 தேர்வின் இறுதி விடை பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் இறுதி விடை பட்டியல் வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது.
இந்தத் தேர்வில், தமிழ்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், தேர்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தேர்வாணையம் கூறியிருந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை http://www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

 

Leave a comment