இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை : ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

ரத்தன் டாடா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில், உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் இடம்பிடிக்கச் செய்த மனிதர் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர்.. பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர். அவருக்கு எனது ஆழ்ந்த வணக்கங்கள். இந்த மாபெரும் மனிதனுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன்.. இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை.. ஆழ்ந்த இரங்கல்." என கூறியுள்ளார்.

 

 

Leave a comment