என்கவுன்ட்டரில் உயிர் இழந்தார் கைதான ரவுடி சீசிங் ராஜா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் வசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேடப்பட்ட நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கைதுக்குப் பின் சென்னை அழைத்துவரப்பட்ட சீசிங் ராஜாவிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை நீலாங்கரை அருகே கொலை செய்யப்பட்ட ஆயுதத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.அதன்படி, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கைப்பற்ற போலீஸார் அவரை நீலாங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்ததால், அவரை போலீஸார் என்கவுன்ட்டர் செய்தனர்

 

 

Leave a comment