துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல பொறுப்பு : உதயநிதி ஸ்டாலின் பதில்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் துதி மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன். எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன். இரண்டு வருடங்களாக அமைச்சராக பொறுப்பு வகித்து என் பணிகளை சிறப்பாக செய்துகொண்டுள்ளேன். இது கூடுதல் பணிதான். ஆனால், தலைவர், அமைச்சர்களின் ஒத்துழைப்போடு இதையும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது. விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக்கொண்டு அதன்படி சிறப்பாக அமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்” என்று கூறினார்.


Leave a comment