சேலம் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி

தேசிய கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 25 -ந்தேதி யிலிருந்து செப்டம்பர் மாதம் 8 -ந் தேதி வரை அனுசரி க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டின் 39-வது தேசிய கண்தான விழிப்புணர்வு அனுசரிப்பின் ஒரு அங்கமாக. கண் தானம் மீதான விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அதிகரிக்க வேண்டுமென்ற குறிக்கோளை கொண்டு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா.சிறப்பு விருந்தினர் கோகுலம் மருத்துவமனையின் ஓலைவர் டாக்டர் அர்தனாரி மற்றும் சமூக சேவகரும். ஆன்மீக பேச்சாளருமாகிய நாகராஜன் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி சேலம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முன்பு 5 ரோடு ரவுண்டானா சுற்றி நடைபெற்றது. சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சாரதா மகளிர் கல்லூரி, கைலாஷ் மகளிர் கல்லூரி, பரணி செவிலியர் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ.வி.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தரண் செவிலியர் கல்லூரியிலிருந்து 800 -க்கும் அதிகமான மாணவ மாணவிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். போலீஸ் துணை கமிஷனர் கீதா இந்நிக ழ்ச்சியில் பேசும்போது, "இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பார்வைத்திறனின்மை என்பது மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மேலும் ஒரு நபர் கண்தானம் செய்வதன் மூலம் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும். மேலும் மாவட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும், தங்களது கண்களை தானம் செய்வதற்கு, உறுதிமொழி வழங்க முன்வர வேண்டும். இதன் காரணமாக இம்மாநிலத்தில் 100 சதவீதம் கண் தானமளிப்பவர்கள்" உள்ள மாவட்டமாக சேலம் மாவட்டத்தை அறிவிக்க இயலும்,"என்று கூறினார்.

 

 

Leave a comment