குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகார பூஜை : ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயலுக்கு பதில் கொடுக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுல பதிவில் `மகா பரிசுத்தம், இறைவனின் தனித்தன்மை, வெங்கடேஸ்வரா சுவாமி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், பகவான் வெங்கடேஸ்வரர் வழங்கிய புனித லட்டுக்கள் மற்றும் வெங்கடேஸ்வரா சுவாமியின் புனிதத்தை இழிவுபடுத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாவங்களைத் தூய்மைப்படுத்த, வருகிற சனிக்கிழமையில் (செப். 28) மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அழைப்பு விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரத்தால் திருமலை கோவிலில் சிறப்பு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்ட நிலையில், எதிர் புஜைக்கு முன்னாள் முதல்வர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a comment