ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இந்திய அணி ‘திரில்’ வெற்றி

சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்ற 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா திரில்’ வெற்றி பெற்றது. இறுதி போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. முன்னதாக ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பையும் இந்திய வீரர்கள் தவறவிட்டனர். 

போட்டியின் கடைசி 10 நிமிடத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. போட்டியின் 51வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை பெற்ற ஜுக்ராஜ் சிங், அதே வேகத்தில் அருமையான கோல் அடித்தார். போட்டி முடிய 27 வினாடி மட்டும் இருந்த நிலையில் சீனா ‘பெனால்டி கார்னர்’ கேட்டு அப்பீல் செய்ய, நடுவர் ஏற்க மறுத்தார். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.

 

 

Leave a comment