டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளார் : ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜிநாமா செய்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். அதே நேரத்தில் அதிஷி டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சூழலில், அதிஷி நாளை மறுநாள் (செப். 21) டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதே நாளில், அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.


Leave a comment