நீட் தேர்வை ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் ஏன் வெளியிடவில்லை : எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட சேலத்தை சேர்ந்த மாணவி புனிதாவின் வீட்டிற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆறுதல் கூறியதுடன், மாணவியின் திருவுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக சார்பில் மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக உதயநிதி கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 41 மாத காலமாகியும் இதுவரை உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிடவில்லை.
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான். நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே ரத்து செய்வோம் என கூறி இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மாநில அரசு மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது என்று கூறினார்.


Leave a comment