உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 இவரது ஜாமீன் மனுவினை உச்சநீதிமன்ற நீதிபதிகளான நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பைத் தள்ளி வைத்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு ஜாமீன் வழங்கியது

 

 

Leave a comment