மாமிச நெய்யால் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு தோஷமா?

திருப்பதி லட்டு விவகாரம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக வெளியான தகவலால், கோவிலின் புனித தன்மை கேட்டு விட்டதாக பெருமாள் பக்தர்கள் வேதனையுடன் சொல்லிக்கொண்டு இருக்கும் சூழலில் ஒரு சில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மாமிச கொழுப்பு கலந்த லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டதால் இது மிக பெரிய பாவ சம்பவம் என்றும், இதற்கு பிராயச்சித்தமாக குடமுழுக்கு செய்து கோயிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மத்தியில் கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது.பக்தர்களின் கோரிக்கையின் மீது விரைவில் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

 

Leave a comment